செவ்வாய், 20 நவம்பர், 2018

இமைக்கா நொடிகள்

13 வருடங்களுக்கு முன்பு இதே நாள் காலையில் அம்மாவை "கேலக்ஸி"யில்  சேர்த்தேன். சிறிது நேரத்தில் வந்த டாக்டர் 'என்ன சார் இவ்வளவு லேட்டா கூட்டிட்டு வந்திருக்கீங்க'  we will try our best என்றார்.
     கொஞ்ச நேரத்தில் ICU வில் கொண்டு போனார்கள். பிறகு கொஞ்ச நேரம் கழித்து என்னை உள்ளே கூப்பிட்டார்கள்.....'pulse' நிக்கவில்லை, 'pressure' மாறிக்கிட்டே இருக்குது',ன்னு ஒவ்வொரு காரணமா சொன்னார்கள்.

அம்மாவை பார்த்தேன், கண்கள் இமைக்கவில்லை..........முட்டிக்கொண்டு வந்த அழுகையை மறைத்துக்கொண்டு டாக்டரை பார்த்தேன். அவர் என்னை சமாதானப்படுத்த நினைத்தாரோ என்னவோ  'shock" கொடுக்க ஏற்பாடு செய்தார். சினிமாவில் வருமே சுருள் வயர்களும் சின்ன இஸ்திரி பெட்டி மாதிரி ரெண்டு கையிலும் .........., என் மைத்துனன் டாக்டர் என்பதால் என்னை யாரும் ஒன்றும் சொல்லவில்லை.

பல்ஸும், பிரஸ்ஸரும் இறங்கிக்கொண்டே இருக்கும்போது முதல் ஷாக் கொடுத்தார்கள்..... அம்மாவின் உடல் ஒருமுறை தூக்கிப்ப்போட்டது, சர்ரென்று பல்ஸும், பிரஸ்ஸரும் மேலே ஏறியது. ஏறிய வேகத்தைவிட கொஞ்சம் மெதுவாக இறங்கத்தொடங்கியது. மீண்டும் ஒரு முறை கொடுத்தார்கள்...........இம்முறை  மேலே போன வேகத்திலேயே கீழே இறங்கியது இரண்டும்......டாக்டர் சிப்பந்திகளிடம் கண்ணை காட்டிவிட்டு என் முதுகில் கைவைத்துவிட்டு வெளியேறினார்.
நான் அம்மாவை பார்த்தேன் கண்கள் இமைக்காமல் வெறித்தன. பல்ஸும், பிரஸ்ஸரும் குறைந்து குறைந்து "0" காட்டியது  இமைக்காமல் பார்த்த என் கண்களுக்கு தெரியவில்லை,  எல்லாம் அடங்கியது. "அம்மாவின் உடல் இங்கே இருக்கு உயிர் எங்கே போச்சு" ....அம்மா என்று அழுதபடி வெளியே ஓடினேன்................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக