சனி, 15 டிசம்பர், 2012

second class

                         இரண்டாம் வகுப்பு 

பயபுள்ளைகளுக்கு  ரயிலில டிக்கெட்டு இல்ல 
பாழாப்போன ரெயில்வேயில  வேலையுமில்ல
ரயில விட்டு ஒருநாளும்  இறங்குற தில்ல   
ராத்திரி முழுக்க தூங்குறதுமில்ல -  பாதிபேர
 நிம்மதியா தூங்க விடுறதுமில்ல  எங்ககூட 
நீண்ட ரயிலில்  சுண்டெலியும்   கரப்பானும் 

புதன், 7 நவம்பர், 2012

power cut

பவர்  கட் ரொம்ப இருக்குதுன்னு நொந்துபோய் (, காலை 4-5,6-10, பகல் 12-4,இரவு 7-8 மற்றும் இரவு 9 முதல் 11 வரை) மொத்தமாய் எல்லாரையும் திட்டி தமிழ் நாட்டுல ஆளுற  ,ஆண்ட கட்சி பெரியவங்களையும் திட்டி ஓரளவுக்கு அமைதியான பிறகு யோசிச்சுப்பர்த்ததில் யோசனையின் தொடக்கத்திலும் முடிவிலும் ஊழல் மட்டுமே பெரிதாகத்தெரிகிறது .
                 நம் நாடு உருப்பட எதாவது வழி  சொல்லுங்க .....ப்ளீஸ் ............!!  
இன்று நடைப்பயிற்சி சென்ற இடத்தில் இருவருக்கிடையே நடந்த உரையாடல் , "யாராவது தன தகப்பன் செத்த வீட்ல அவன தொட்டு எதாவது செய்றாங்களா? குறைஞ்சது குளிப்பட்டவாவது செய்றன்களா?"
    கண்டிப்பா யாரும் செய்திருக்க மாட்டோம் . ஆனால் ஏன் ?

செவ்வாய், 1 மே, 2012

அன்பான அனைவருக்கும்

யார் மனதில் என்ன ? யாருக்குத்தெரியும்.
 எல்லோர் வாழ்விலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒன்று நம் உற்றவர்களிடம்கூட சொல்ல முடியாத சில விஷயங்கள் உறங்கிக்கொண்டிருக்கும் . 

அது  எதனால்  சொல்லாமல் மறைக்கப்படுகிறது?. எதற்கு பயந்து அது  சொல்லப்படவில்லை? தம் மரணம் வரையில் யாரிடமும் சொல்லாமல்  இருப்பதன் காரணம் என்ன?

இந்த   சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஏதோ ஒன்றை செய்து அதற்க்கு பயந்து அது வெளியே தெரிந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு அஞ்சி , இஞ்சி தின்ற  குரங்காக அலையாதவர்கள் நம்மில் எத்தனை  பேர்?

சமீபத்தில் தங்கமலை ரகசியம் திரைப்படம் கண்டேன் .
இது வேறு விதமானது . தன்னைப்பற்றி அறியாத ஒருவன் அவன் பிறப்பு, குலம் , தாய் ,தந்தை, மற்றும் எதிரி ஆகியோரை அறிந்து கொள்வதே படத்தின் கரு.

 இவை அனைத்தையும்விட ஒன்றை நான் அன்று உணர்ந்தேன். எனக்கு தாய் தந்தை உறவினர் எல்லாம் உண்டு. நான் யார் என்பதும், எதற்காக பிறந்தேன் என்பதும் , ஏன் படைக்கப்பட்டேன் என்றும் கேட்கத்தயாரானேன். நண்பரிடம் சொன்னேன் . "இப்பத்தான் லேசா தொடங்குதோ" என்று தனது நெற்றிப்பொட்டின் அருகே ஆட்காட்டி விரலை சுற்றிக்கட்டினார்.

    சரி என்ன செய்ய இருக்கவே இருக்குது வலை தளம் .யார் கிட்டயாவது 
 கேப்போமுன்னு ........................................ உடனே   தொடங்கிவிட்டேன் ஒரு ப்ளாக்(யாராவது தமிழ்ப்படுத்தவும்).

முதலில் ரகசியம்னா    என்னன்னு  யாராவது இத  படிக்கிறவங்க  சொல்லுங்க.

அன்புட ன் 

ஜோஜோ .