நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்ததாகிப்போனதற்க்கு இரண்டு காரணம் உண்டு.
1. நமக்கு பிடித்த பனங்கிழங்கை நாரையின் அலகுக்கு (வாய்க்கு) ஒப்பிட்டு கூறுவது.
2. புலவனின் ஏழ்மை நிலையை நம் மனத்தில் அப்படியே கொண்டு வருவது.
இதுக்கெல்லாம் அப்பால் நமக்கு தனிப்பட்ட முறையில் ஒன்று உண்டு, அது எங்களது உயர் மட்ட அதிகாரிகளை சந்திக்க செல்லும் கடை நிலை அதிகாரிகளின் கதியும் கிட்டத்தட்ட புலவனின் நிலைதான்.
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வார்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக்கேகுவீராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
"எங்கோன் மாறன்வழுதி கூடலில்
ஆடையின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே"
- சத்திமுத்தப்புலவர்