திங்கள், 5 ஜூலை, 2021

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்

 விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதை ஆகும                                                     வெண்ணிலாவோ தேவன் அமரும் வாகனம் ஆகும்

ஞான ஜோதியேஉயர்வான ஜோதியே

தானாகவே உலகில் இறங்கும்தர்ம ஜோதியே



மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதரின் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதரின் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியிலே புதல்வன் ஆகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்



மழலை மொழிகள் பேச கேட்ட மனது கொள்ளாதோ ?
மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ ?
பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்
கைகள் பட்டால் போதும் உடன் கவலைகள் எல்லாம் தீரும்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
இறங்கி வருகிறார்

அடியவர்கள் மடியினிலே ஆண்டவனோ பிள்ளை
அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை
கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்...
குணம் படைத்த குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்
மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்
நல்ல மனிதரின் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்
எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே
ஒரு புண்ணியரின் மடியிலே புதல்வன் ஆகிறார்
மண்ணுலகில் இன்று தேவன் வந்து இறங்கினார்
நல்ல மனிதரின் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்

Fervor-filled lyrics (Thanjaivaanan- Real name: Govindaramanujam), heralding the birth of the Lord. The tolling of the church bells and the choral voices set the mood for this divine song, and Vani makes us close our eyes and bow our heads with the thogayraa itself. Wonderful music by MSV, indeed the song takes on a hallowed aura of a powerful psalm, and Vani glitters as the harbinger of happiness. She changes the pallavi in the end to "Mannulagil indru devan vandhu iranginaan", announcing that the Lord is already born.