செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

எனக்கு உன்னை பிடித்ததைவிட .....
என் நட்பு வட்டத்துக்கு உன்னை பிடித்ததைவிட ....
காலனுக்கு உன்னை அதிகம் பிடித்திருந்ததோ .......
கொண்டு போய்விட்டான் எ(ன்னி)ங்களிடமிருந்து ..................
உன்னை பிரித்து.
-----------------------------------------------------------------
நான் , என் மனைவி ,பிள்ளைகளுடன் உன் இல்லம் வருகிறேன்.
உன் கணவன் பிள்ளைகளுடன் அளவளாவுகிறேன்
நீ என் பிள்ளைகளை அழைத்து போய் பேசுகிறாய்
உன் கணவர் என்னிடம் உரையாடுகிறார் ,
என் மனைவி உன்னை விசாரிக்கிறாள் .
அத்தனையும் ஒரு கனவாகவே இருந்துவிட்டிருக்கலாம்
என் ஆயுட்காலம் முழுவதற்கும்......
உன் துர்மரணச்செய்தி இடியாய்
என் இதயத்தை நொறுக்கியதைவிட .
பிரிவின் வலிகள் மிகவும் கொடுமை
அதே காதலில் மிக மிக கொடுமை

வாழ்க்கையில் பல வலிகளை சந்திக்கும் பொது
நாளை விடியும் பொழுது நடையாக மறைகிறது

ஏனோ இந்த காதலின் வலி மட்டும்
விடிந்த பின்னும் இரவு முடிந்தப் பின்னும்

அவளுடன் இருந்த நாட்களும் நிமிடங்களும் நினைவுகளாக
என் முன்னே நிழலாடிட
மனம் திண்டாடுக்கிறது அவள் நினைவில்.  ..............................           ரவி.சு
என் இதயத்தில் உறைத்தது
போயிருக்கும்

உன் நினைவுகள்
என் இதய துடிப்பு உள்ளவரை
வாழ்த்திடுவாய்

என் இதயத்தில்
காதலியாய்...                                                              கவியின் கவிதையிலிருந்து .
வெறுத்த ஒருவரையே மறக்க
முடியாத போது
விரும்பிய ஒரு உயிரை எப்படி
மறக்க முடியும்.......................
என்றும் அவள் நினைவுடன் -கவியின் கவிதை துளிகளில் இருந்து .