நன்றாக நினைவில் இருக்கிறது .தச்சநல்லூரில் , நான்காம் வகுப்பு படிக்கும் போது அப்பாவுடன் குளத்துக்கு குளிக்க சைக்கிளில் சென்றது.
வழக்கமாக சைக்கிளில் கேரியரில் அமர்ந்து காலை பின்னி உட்கார்வது அன்று அருகில் சென்ற வண்டியில் இருந்த என் வயது ஒத்தவன் கேரியரில் இரு கால்களையும் அகட்டி வைத்திருந்ததை பார்த்து நாமும் அப்படி கேரியரில் இருந்தால் என்ன ? என்று , பின்னியிருந்த கால்களை எடுத்தேன் . சடசடவென்று ஒரு சத்தம் .
அப்பா சட்டென சைக்கிளை நிறுத்தினார் .பின்னால் என் கால்களில் இரத்தம் வருவதை பார்த்து உடனே அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிசென்று மருந்திட்டு கட்டுப்போட்டு வீட்டில் கொண்டு விட்டார்.
அம்மாவை பார்த்ததும் அவ்வளவு நேரம் அடங்கியிருந்த அழுகை பீரிட்டு வர "அம்ம்ம்ம்மா" என கைகளை நீட்டினேன் .அம்மா வேகமாக வந்து "எம்மா எம்புள்ள" என்று அணைத்துக்கொண்டார் .
அபிராமி அந்தாதியில் 33வது பாட்டில்
"உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே"
என்று வாசித்தவுடன் அந்த நிகழ்வும் நினைவு வர அம்மா , அபிராமியாக அபிராமியந்தாதி மிகவும் பிடித்துப்போனது.
நேற்று அம்மா நினைவுநாள்
நான்தான் தினமும் அபிராமியந்தாதி கேட்கிறேனே.