ஹைகிரவுண்டு மருத்துவமனை
அத்தைக்கு அறுவை சிகிட்சை முடிந்து ஆசுபத்திரியில் இருந்தார்கள். பார்க்க சென்றிருந்தேன். முதல் நாள் சென்ற போது அறுவை சிகிட்சை மயக்கத்தில் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார் பிறகு பார்க்கலாம் என்று வந்து விட்டேன். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஆஸ்பத்திரி சென்றபோது. அத்தை நன்கு தெளிந்த்திருந்தார்.
மெல்ல பேச்சு கொடுத்தேன், ' ஏன் அத்தை , அன்று என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தீர்களே? என்றேன் .
சட்டென "அது ஒன்னும் இல்ல மருமகனே ! ' என்று இந்த கதையை சொன்னார்.
அப்போது நான் திருச்செந்தூரில் பணி செய்து கொண்டிருந்தேன். வழக்கமாக கோவிலுக்கு செல்வேன் , அப்படி ஒரு நாள் கோவிலுக்கு சென்றபோது ஒரு சாமியாரிடம் ஜோசியம் கேட்டேன் . ஜோசியத்தில் எனக்கு பிள்ளைப்பேறு கிடையாது என்று சொன்னார். ஆனால் அப்போதே எனக்கு குமாரி இரண்டு வயது பிள்ளை. நான் எதுவும் சொல்லாமல் வந்து விட்டேன்.
அதன் பிறகு சில காலம் ( மாதங்கள் ) கழித்து என் மகளுடன் கடை கோவிலுக்கு சென்றபோது சாமியாரை பார்க்க நேர்ந்தது . சாமி என்னிடம் "இது உங்s அக்கா மகளா?" என்று கேட்டார் . நானும் "ஆமாம்" என்றோ இல்லை என்றோ சொல்லாமல் வெறுமே தலையாட்டிவிட்டு வந்தேன்.
அதன் பிறகு கோயிலில் சாமியார் இருக்கும் பகுதிக்கு போனதில்லை, என்றாலும் குமாரியை எங்கும் தனியாக அனுப்ப பயந்தேன் . எங்கே நம் மகள் நம்மை விட்டு போய்விடுவாளோ என மனதுக்குள் பயந்தேன், என்று கதையை கூறியவர், அறுவை சிகிட்சை முடிந்து இருந்தபோது இந்த நினைவு அதிகமாக இருந்தது.
அன்றே அந்த சாமியாரிடம் "இவள் என் மகள்" என்று சொல்லாமல் விட்டுவிட்டோமே? என்று எப்போதும் வரும் வருத்தம் வந்தது " என்று முடித்தார்.
இப்போது குமாரிக்கு முப்பதைத் தாண்டி வயதும், இரண்டு வயதில் பெண் குழந்தையும் உண்டு.
ஆச்சரியம் என்னவென்றால் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கடந்தும் , ஒரு நல்ல மனதை , சொல்லாத ஒரு உண்மை சுட்டுக்கொண்டுதான் இருந்திருக்கிறது.
ஜோஜோ(ஜோதி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக