புதன், 20 மே, 2015

வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீஇன்றி நானில்லை
நானின்றி நீயில்லை
கண்மணி
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

காதலின் ஜாடையெல்லாம்
கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ
முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருக பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உருவம் மலர

வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீஇன்றி நானில்லை
நானின்றி நீயில்லை
கண்மணி
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

மேனியின் மஞ்சள் நிறம்
வானளந்ததோ
பூமியின் நீல நிறம்
கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன்
உயிரிலே கலந்து மகிழ


வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீஇன்றி நானில்லை
நானின்றி நீயில்லை
கண்மணி
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக