சூரியன் மங்கும் சாயங்கால நேரம், வானத்தில் நிலா லேசாக முகம் காட்டியது. வாசல் தெளித்துக்கொண்டிருந்தாள் அமுதா.
முகத்தில் அன்றைய தினச்சோர்வோடு வண்டியை நிறுத்திவிட்டு தளர்வாக நடந்துவரும் ஆதியை பார்த்ததும் “ நீங்க முகம் கழுவிட்டு லேசா ஃப்ரெஷ் ஆகுங்க அதுக்குள்ள காபி போட்டுர்ரேன்” என்று சொல்லிவிட்டு கிச்சனுக்குள் போனாள்.
கையில் காபியுடன் உட்கார்ந்திருந்தவனிடம் முறுக்கும் மிச்சரும் இருந்த சிறிய தட்டுடன் வந்து அவனிடம் நீட்டியவாறே ஷோஃபாவில் அமர்ந்தாள்.
மெதுவாக” ஏங்க இன்ன்க்கு கொஞ்சம் ஃப்ரீயா இருந்தீங்கன்னா பொருட்காட்சித்திடல்ல கண்காட்சி போட்ருக்கான், அப்பிடியே பாத்துட்டு வரலாமா” என்று கேட்டாள். “அதுக்கென்ன, தாராளமா” என்றான் ஆதி.
வழக்கமான பொருட்காட்சித்திடல், முகப்பில் அலங்கார விளக்குகள், விளம்பரங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக