புதன், 26 ஆகஸ்ட், 2015

அன்னை தெரெசா

சுமார் ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள BAY WATCH க்கு சென்றிருந்தேன் என் குடும்பத்துடன்.
அங்கு மெழுகினால் ஆன சாருக், யேசுதாஸ், மோகன்லால்  மற்றும் அன்னை தெரெசா ஆகியோரது முழு உருவ பொம்மைகள் இருந்தன. அனைவரும் ஒவ்வொரு சிலைகளின் அருகில் நின்று படம் பிடித்துக்கொண்டிருந்தோம். என் மனைவியிடம் அன்னை தெரெசா அருகில் சென்று நிற்கச்சொன்னேன். அவள் உடனடியாக மறுத்து தனக்கு அன்னை அருகில் நிற்க தகுதி இல்லை என சொன்னாள்(ர்).
அந்த இடத்தில் இருந்தது வெறும் மெழுகு சிலை என்று நினைக்காமல் அதன் உள்ளிருந்த அன்னையை உணர்ந்து எனக்கு உணர்த்திய என் மனைவி என் முன் உயர்ந்து நின்றாள். உள்ளத்தால் உயர்ந்தவர்களுக்கு தங்களை தாழ்த்திக்கொள்வதிலே அவ்வளவு ஆனந்தம்.

நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
தீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவன்னம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால்திருத் தங்கச்சியே.
                                                                           - அபிராமிப்பட்டர்.

இன்று அன்னையின் அவதார தினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக